சாதாரண துணியால் ஆன மாஸ்க் அணிந்திருந்த பிரதமர் மோடி... காரணம் இதுதான்...!

"பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்"

சாதாரண துணியால் ஆன மாஸ்க் அணிந்திருந்த பிரதமர் மோடி... காரணம் இதுதான்...!
சாதாரணமான மாஸ் அணிந்திருந்த பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: April 11, 2020, 2:27 PM IST
  • Share this:
அனைத்து மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனையில் பிரதமர் மோடி, N 95 அல்லது மருத்துவ மாஸ்க் எதுவும் அணியாமல், சாதாரண துணியிலான மாஸ்கை அணிந்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சில மாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.


நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் மோடி ஆலோசித்தார்.

இதில் முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை நாளையோ, நாளை மறுதினமோ மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒரு சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சில மணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.



இதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் மாஸ்க் எதுவும் அணியாமல் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், இம்முறை அவர் மாஸ்க் அணிந்துள்ளார். உத்தவ் தாக்கரே உள்ளிட்ட சில மாநில முதல்வர்களும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

எனினும், பிரதமர் மோடி சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐயே அணிந்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வீட்டில் கிடைக்கும் துணிகளைக் கொண்டு மாஸ்க் தயாரித்து மக்கள் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனை அடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள், வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.

எனினும், N 95 மற்றும் மருத்துவ மாஸ்க்களுக்கு அதிக தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை மறைக்கவே, பிரதமர் இப்படி ஒரு வேண்டுகோளை விடுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சிக்கப்பட்டது.

மக்களிடம் தான் விடுத்த கோரிக்கைக்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி, இன்றைய கூட்டத்தில் சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து கலந்துகொண்டுள்ளார்.

















 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading