Home /News /coronavirus-latest-news /

காஞ்சிபுரம் நபருக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட 27 பேர்...!

காஞ்சிபுரம் நபருக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட 27 பேர்...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
    காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் உடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

    ஓமன் நாட்டில் சுமார் 12 ஆண்டுகள் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 27ம் தேதி விமானம் மூலம் தமிழகம் திரும்பினார்.

    இதனை அடுத்து, சளி மற்றும் காய்ச்சல் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.



    பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா அறிகுறிகள் இருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டியில் கிங் ஆய்வு நிறுவனத்திற்கும், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தனி வார்டில் தங்க வைத்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அவரது குடும்பத்தினரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவருடன் இருந்த 27 பேரை கண்டறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை பரிசோதித்துள்ளனர்.



    அதில், 8 பேர் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதாகவும், மற்றவர்கள் நோய்க்கிருமி தாக்க வாய்ப்பில்லாத வகையில் தொடர்பில் இருந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே, இன்று காலை அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவன் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் ரத்தமும் சோதனை செய்யப்பட உள்ளது.




    Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Published by:Sankar
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி