கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு!

பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு!
பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
  • Share this:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் 2,624 கைதிகளை ஜாமினில் விடுவிடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக பரவலை தடுக்க அனைவரும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளின் அடர்த்தியால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சிறிய தண்டனை பெற்றவர்களை ஜாமினில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இவர்களை விடுவித்துள்ளதாகவும், ஏற்கனவே பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.


அத்துடன், தற்போது பரோல் கேட்கும் கைதிகளை, அவர்களின் குற்றத்தன்மையை ஆராய்ந்து பரோல் வழங்க பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளியிலிருந்து சிறைக்கு வரும் கைதிகளிடம் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் சட்டத்துறை  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading