246 PASSENGERS FROM UK TO LAND IN DELHI TODAY AMID FEARS OF NEW CORONAVIRUS STRAIN MUT
உருமாறிய புதுவகை கொரோனா அச்சங்களுக்கு இடையே 246 பயணிகள் பிரிட்டனிலிருந்து இன்று இந்தியா வருகின்றனர்
கோப்புப் படம்
விமானத்தின் மூலம் இந்தியா வருபவர்களுக்கு கட்டண ஆர்டி. பிசிஆர் சோதனைகள் கட்டாயமாக நடத்தப்பட மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.டி. பிசிஆர் சோதனைக்கு நபர் ஒருவருக்கு ரூ.3,400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் பரவல் அச்சங்களுக்கு இடையே 246 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி வரவிருக்கிறது.
இங்கிலாந்தில் உருமாறிய புதுவகை கொரோனா அச்சங்களினால் அங்கு லாக் டவுன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா-பிரிட்டன் இடையே ஜனவரி 8ம் தேதி முதல் விமானச் சேவை தொடங்குகிறது.
ஜனவரி 6ம் தேதி டெல்லியிலிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. புதனன்று இன்னொரு விமானம் மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது. இந்த 2 விமானங்களின் மூலம் சுமார் 491 பயணிகள் இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
புதுவகை கொரோனாவினால் விமானச் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்பாக இந்தியா-பிரிட்டன் இடையே வாரம் ஒன்றிற்கு 60க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
விமானத்தின் மூலம் இந்தியா வருபவர்களுக்கு கட்டண ஆர்டி. பிசிஆர் சோதனைகள் கட்டாயமாக நடத்தப்பட மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.டி. பிசிஆர் சோதனைக்கு நபர் ஒருவருக்கு ரூ.3,400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பாக பயணிகள் சுய விவர படிவத்தைப் பூர்த்தி செய்து அதிகாரிகளிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்தச் சோதனையில் நெகட்டிவ் என்று வந்து அதனை சமர்ப்பிக்க வேண்டும்.
விமான நிலையத்தில் கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். இவர்களது கொரோனா பாசிட்டிவ் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 246 பயணிகள் பிரிட்டனிலிருந்து இந்தியா வரவிருக்கின்றனர்.