விளாத்திக்குளத்தில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா - 3 நாள்களுக்கு அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 3 நாளைக்கு அனைத்துக் கடைகளையும் மூட வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.

விளாத்திக்குளத்தில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா - 3 நாள்களுக்கு அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு
விளாத்திகுளத்தில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திக்குளத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடந்த 4ஆம் தேதி விளாத்திகுளம் நகரிலுள்ள வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 104 வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது சளி மாதிரி வழங்கினார். இதன் முடிவு இன்று வெளியாகியுள்ளது.

அதில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கே.சுந்தரேஸ்வரபுரத்திற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த‌ ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விளாத்திக்குளம் பகுதியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ‌ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also see:இந்நிலையில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து விளாத்திக்குளம் பேருராட்சி, கே.சுப்பிரமணியபுரம்,‌ கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் நாளை முதல் (7ந்தேதி)  மூன்று நாளைக்கு அனைத்து கடைகளை அடைக்க வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மெடிக்கல் மற்றும் பால் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 24 வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி,‌ கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading