Oxygen Shortage | கர்நாடகாவில் அதிர்ச்சி: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உட்பட 24 பேர் மரணம்- துரதிர்ஷ்டம் என பாஜக அமைச்சர் வேதனை

Oxygen Shortage | கர்நாடகாவில் அதிர்ச்சி: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உட்பட 24 பேர் மரணம்- துரதிர்ஷ்டம் என பாஜக அமைச்சர் வேதனை

படம். | ஏ.என்.ஐ.

கர்நாடகா காமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் உட்பட 24 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    ஞாயிறு இரவு இந்த துயரகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது, ‘நாங்கள் இறப்பு தணிக்கை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்று மாவட்ட நிர்வாக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மைசூரிலிருந்து 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்த மருத்துவமனைக்கு அவசரநிலை பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டது. பெல்லாரியிலிருந்து வரவேண்டிய ஆக்சிஜன் குறித்த நேரத்துக்கு வரவில்லை, காரணம் ஆக்சிஜன் ஸ்டாக் இல்லாமல் போயுள்ளது.

    முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா காமராஜ்நகர் மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பவம் குறித்து பேசினார்.

    இந்தியா டுடே ஊடகத்துக்கு பேட்டியளித்த கர்நாடகா சுகாதார அமைச்சர் கே.சுதாகர் இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றார், “காமராஜநகரில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. முதல்வரிடம் இது குறித்து கலந்தாலோசித்தேன். நான் மைசூரு, மாண்ட்யா மற்றும் காமராஜநகருக்குச் செல்கிறேன். மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரிப்பதோடு அங்குள்ள பிரச்னைகளையும் விசாரிக்கிறேன்” என்றார்

    ராகுல் காந்தி இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ‘இறந்தனரா? கொல்லப்பட்டனரா?’ என்று ட்விட்டரில் சாடியுள்ளார், “இறந்தனரா, கொல்லப்பட்டனரா, அவர்களின் குடும்பங்களுக்கு எனது இதயம் கனிந்த அனுதாபங்கள். இந்த அமைப்பு விழித்துக் கொள்வதற்குள் இன்னும் எத்தனை துயரங்களோ?” என்று ட்வீட் செய்துள்ளார்.

    மருத்துவமனைகள் குறிப்பாக மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கொரோனா இப்போது பெருநகரங்களிலிருந்து சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,18,959 ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை மொத்தம் 15,71,98,207பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: