கொரோனா அச்சத்தால் கலவரம்: சிறைக்கைதிகள் 23 பேர் சுட்டுக்கொலை..!

கொரோனாவை காரணம் காட்டி கைதிகள் தப்பிக்க முயற்சித்ததாக கொலம்பிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா அச்சத்தால் கலவரம்: சிறைக்கைதிகள் 23 பேர் சுட்டுக்கொலை..!
கலவரம் ஏற்பட்ட செய்தி அறிந்து சிறையின் முன் குவிந்த கைதிகளின் உறவினர்களும் பத்திகையாளர்களும்.
  • Share this:
கொலம்பியாவில் கொரோனா அச்சத்தால் ஏற்பட்ட கலவரத்தில் சிறைக்கைதிகள் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொலம்பியாவில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொலம்பிய சிறைகளில் கைதிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், சுகாதார வசதிகள் குறைவாக இருப்பதாகவும் கூறி கைதிகள் போராட்டத்தில் இறங்கினர்.

பொகோட்டாவில் உள்ள பெரிய சிறைச்சாலை ஒன்றில் இந்தப் போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறையில் சுகாதார பிரச்னைகள் இருப்பதாகக் கூறுவது தவறானது என்றும் கொரோனாவை காரணம் காட்டி கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு தப்பிக்க முயற்சிப்பதாகவும் கொலம்பிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.


Also see:
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading