சென்னை கண்ணகி நகரில் கொரோனா பாதிப்பு 23ஆக அதிகரிப்பு!

தென் சென்னை பகுதியில் ஒரு மாதத்துக்கு முன் தொற்று மிகக் குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

சென்னை கண்ணகி நகரில் கொரோனா பாதிப்பு 23ஆக அதிகரிப்பு!
கோப்புப்படம்
  • Share this:
சென்னையின் குடிசைமாற்று வாரிய கண்ணகி நகர் குடியிருப்பில் இதுவரை 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் குடியிருப்பில் 23 ஆயிரம் வீடுகள் உள்ளன.

கொரோனா பாதித்தவர்கள் இருக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் வரையறை தற்போது மாற்றப்பட்டு வருகிறது. ஒரு தெரு முழுவதும் அல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் கட்டடம் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதன்படி, கண்ணகி நகர் குடியிருப்பில் குறிப்பிட்ட கட்டடங்கள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு மார்க்கெட் மூலமாகவும், தூய்மைப் பணியாளர் மூலமாகவும் இந்தத் தொற்று பரவியுள்ளது. தென் சென்னை பகுதியில் ஒரு மாதத்துக்கு முன் தொற்று மிகக் குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சென்னை குடிசை மாற்றுவாரிய கண்ணகி நகர் குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், சோழிங்கநல்லூரில் 52, பெருங்குடியில் 51 , அடையாறு மண்டலத்தில் 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர 3 பேர் அடையாறில் உயிரிழந்துள்ளனர்.


இதுவே மே 1ம் தேதி இந்த மண்டலங்களின் நிலவரம்: சோழிங்கநல்லூர்- 3, பெருங்குடி- 9, அடையாறு - 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒருவர் கூட உயிரிழிக்காமல் இருந்தது.










Also see:
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading