• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சிங்கப்பூரில் 22 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொரோனா..!

சிங்கப்பூரில் 22 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொரோனா..!

பங்கோல் எனும் பகுதியிலுள்ள டார்மிடரி. (கோப்புப்படம்)

பங்கோல் எனும் பகுதியிலுள்ள டார்மிடரி. (கோப்புப்படம்)

கொரோனா வைரசோடு மக்களை வாழப்பழக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையைக் கடைபிடிக்கும் திட்டமில்லை என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

  • Share this:
    சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 90 விழுக்காட்டினர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாக இருப்பதால் 3 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்தத் தொழிலாளர்கள் அனைவருமே டார்மிடரி எனப்படும் அடுக்கடுக்கான படுக்கைகள் கொண்ட தங்குமிடங்களில் போதிய வசதியின்றி தங்கியுள்ளார்கள். தற்போது 32,000 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 22,000 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிறிய அறிகுறிகளே இருப்பதால் அனைவரும் இம்மாத இறுதிக்குள் சிகிச்சை முடிந்து திரும்புவார்கள் என சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.

    கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,000 நெருங்கியுள்ள நிலையில், வைரசோடு மக்களை வாழப்பழக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையான சமூகத் தடுப்பாற்றல் எனப்படும் Heard Immunityஐ கடைபிடிக்கும் திட்டமில்லை என சிங்கப்பூர் கூறியுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: