சென்னையில் தங்க நகை பட்டறையில் 22 பேருக்கு கொரோனா...!

கோப்புப் படம்

சென்னை போன்ற நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றில் கூட்டு தொற்று கண்டறியப்படுவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை வால்டாக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் தங்க நகை பட்டறையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கூட்டு தொற்று ( cluster) கண்டறியப்பட்டு வருகின்றன. தரமணி பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவ நிறுவனம் ஒன்றில்  44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போன்று கிண்டி மத்திய பயிற்சி மையத்தில் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதை தவிர மடிப்பாக்கம் நங்கநல்லூர் பகுதிகளில் குடும்பங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் தங்க நகை பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்  இங்கேயே தங்கி நகைத் தொழில் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், அங்குள்ள  54 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டதில், 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Also read... பள்ளிகளில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

கொரோனா பாதிப்புக்கு உள்ளான 22 பேரும், தண்டையார் பேட்டை காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்கள் அங்கேயே தனிமை படுத்தப்பட்டு உள்ளனர்.

அதே போல் சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை போன்ற நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றில் கூட்டு தொற்று கண்டறியப்படுவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: