கொரோனா பாதித்த சென்னை இளைஞர் குணமாகி வீடு திரும்பினார்...!

கொரோனா பாதித்த சென்னை இளைஞர் குணமாகி வீடு திரும்பினார்...!
ராஜீவ் காந்தி மருத்துவமனை
  • News18
  • Last Updated: March 28, 2020, 3:54 PM IST
  • Share this:
தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் முற்றிலும் குணமாகி வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் நபராக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் குணமாகி வீடு திரும்பினார். மதுரையைச் சேர்ந்த நபர், உயிரிழந்தார். இந்த நிலையில், மேலும் ஒருவர் முற்றிலும் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.


கடந்த 17-ம் தேதி அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மூன்றாவது நபராக அவர் அறியப்பட்டார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்களிலேயே அவரது உடலில் வைரஸ் தாக்கம் குறைந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இரண்டு பரிசோதனைகளிலும் வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்ததாகவும், வீட்டில் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.


தமிழகத்தில் தற்போது வரை 2 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இரண்டாவது நபராக அனுமதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இளைஞரின் உடல் நிலையிலும் முன்னேற்றம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading