Home /News /coronavirus-latest-news /

புதுச்சேரியில் 2 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் - அமைச்சர் தகவல்..!

புதுச்சேரியில் 2 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் - அமைச்சர் தகவல்..!

”புதுச்சேரியில் சுற்றுலா பழைய நிலைக்கு திரும்ப ஒரு ஆண்டாகும்”

”புதுச்சேரியில் சுற்றுலா பழைய நிலைக்கு திரும்ப ஒரு ஆண்டாகும்”

”புதுச்சேரியில் சுற்றுலா பழைய நிலைக்கு திரும்ப ஒரு ஆண்டாகும்”

    வெளிமாநிலத்திலிருந்து புதுச்சேரி திரும்பும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  சுய கட்டுப்பாடோடு தாங்களே வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று  அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெருவுத்தார்.

    இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் நபர் உட்பட 3 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை புதுச்சேரியில் 4364 பரிசோதனைகள் செய்யப்பட்டு 4273 தொற்று இல்லை என வந்துள்ளதாகவும் 74 பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார். நாளை முதல் ரயில் போக்குவரத்து துவங்குவதால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பல மாநிலங்களில் உள்ளனர்.

    ஆயிரம் பேருக்கு மேல்  வந்தால் மருத்துவமனை, மருத்துவர் என தேவை இருக்கும். இதனால் ஏற்கனவே ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியே வர கூடாது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் புதுச்சேரி மக்களால் நோய் வரலாம்.

    அதனால் புதுச்சேரி மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் என்றும் வெளிமாநிலத்திலிருந்து புதுச்சேரி திரும்பும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  சுய கட்டுப்பாடோடு தாங்களே வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

    புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி தருவதில் தாமதம் செய்தால் பட்ஜெட் போட முடியவில்லை என தெரிவித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மத்திய அரசு நமக்கு இதுவரை எந்த நிதியும் தரவில்லை. மத்திய அரசு நிதி தருவதில் தாமதம் செய்தால் பட்ஜெட் போட முடியவில்லை. அதனால் மத்திய அரசு நிதியை தர வேண்டும் என்றும் புதுச்சேரியில் தொழிற்சாலைகள் துவங்க 6 மாதங்களாகும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் சுற்றுலா பழைய நிலைக்கு திரும்ப ஒரு ஆண்டாகும் என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Puducherry

    அடுத்த செய்தி