• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனோவால் உயிரிழந்த 2000-க்கும் மேற்பட்டோரில் எத்தனை நபருக்கு காப்பீட்டு திட்டம் இருந்தது தெரியுமா?

கொரோனோவால் உயிரிழந்த 2000-க்கும் மேற்பட்டோரில் எத்தனை நபருக்கு காப்பீட்டு திட்டம் இருந்தது தெரியுமா?

எல்.ஐ.சி தென்மண்டல மேலாளர் கதிரேசன்.

எல்.ஐ.சி தென்மண்டல மேலாளர் கதிரேசன்.

கொரோனோவால் உயிரிழந்த 2000 பேரில் 16 நபர்கள் மட்டுமே எல்.ஐ.சி. காப்பீடு திட்டம் பெற்றுள்ளனர் என தென் மண்டல மேலாளர் கதிரேசன் பிரத்யேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனோ தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பலரின் குடும்பங்கள் மேலும் ஏழ்மையான நிலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் உறுதுணையாக இருப்பது நாம் முன்கூட்டியே நமது குடும்பத்தின் நலனுக்காக காப்பீடு செய்து வைப்பதே. ஆனால், காப்பீட்டுத் திட்டத்தில் பெரும்பாலானோர் இணைவதில்லை. இதனால் இன்றளவும் அதன் பாதிப்பை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, தென் மண்டலத்தில் 2000க்கும் மேற்பட்ட கொரோனோ இறப்புகள் ஏற்பட்டுள்ளது; ஆனால் அவர்களின் விவரங்களை எல்.ஐ.சி சார்பில் ஆய்வு செய்து பார்க்கும்போது வெறும் 16 நபர்கள் மட்டுமே காப்பீட்டுத் திட்டம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மொத்தமாக 77 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காப்பீட்டுத் திட்டம் இல்லாமல் 99 சதவிகிதம் மக்கள் தங்கள் குடும்பத்தினை கவலையடையச் செய்துள்ளனர்.

Also read: கந்தசஷ்டி விவகாரத்தில் தமிழக அரசை ரஜினி பாராட்டியுள்ளார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்

இது குறித்து தென் மண்டல மேலாளர் கதிரேசன் கூறுகையில், இனிமேலாவது விழிப்புணர்வை அதிகரித்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். மேலும், உயிரிழக்கும் எல்.ஐ.சி பாலிசிகாரர்களின் குடும்பங்களுக்கு 24 மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை கிடைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: