மகாராஷ்டிராவில் 20 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்

கொரோனா தடுப்புப் பணி

மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டம், அம்டி கிராமத்தில் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், அந்த கிராமத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் காட்டாஞ்சலி தாலுகாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்த முகாமில் இருந்த அம்டி கிராமத்தை சேர்ந்த 19 பேர் மற்றும் மேலும் ஒருவர் என மொத்தம் 20 நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அவர்கன் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சஞ்சய் புரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் தப்பிஓடிய 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த சம்பவம் குறித்து யவத்மால் மாவட்ட ஆட்சியர் அமோல் யெட்கே கூறுகையில், “இதுபோன்ற மோசமான நடத்தைகள் தொடர்ந்தால், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வழக்குகள் கடுமையாக்கப்படும்.

  தப்பி ஓடிய நோயாளிகள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

  Must Read : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்... ஆக்சிஜன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல்

   

  நாடு முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்கவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

  இந்நிலையில், பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டுகளையும் விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி, நோய் பரவலைத் தடுக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: