கொரோனா பரவியதால் தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு அபராதம்... வழக்கு பதிவு

பள்ளி மாணவிகள்

தஞ்சாவூலில், 11 பள்ளிகளில் 98 மாணவ மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தஞ்சாவூரில் 11 பள்ளிகளில் 98 மாணவ மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி மீது 12,000 அபராதம், தஞ்சை தனியார் மேக்ஸ்வெல் பள்ளிக்கு 5000, மற்றும் பள்ளி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தஞ்சாவூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நோய் தொற்று மையங்களாக மாறி வருகின்றன. தஞ்சை நகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளில் 27 மாணவ, மாணவிகளுக்கும், வல்லத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கும் வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 11 பள்ளிகள், 2 கல்லூரிகள், ஒரு பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் 98 பேர், கல்லூரி மாணவர்கள் 7 பேர், ஆசிரியர்கள் 15 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    தஞ்சையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 2,75,000 மாணவ, மாணவிகள் பள்ளி சென்று வந்த சூழலில், 5022 மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1170 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2270 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை.

    மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 14 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா அறியப்பட்டால், பள்ளிக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் படிக்க...கட்சிக்கு துரோகம் செய்தால் தூக்கி எறியப்படுவீர்கள்...

    சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, மாநகராட்சி சார்பில் வீதி வீதியாக சென்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் அலட்சியமாக செயல்பட்டதாக கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி மீது 12,000 அபராதம், தஞ்சை தனியார் மேக்ஸ்வெல் பள்ளிக்கு 5000, மற்றும் பள்ளி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: