ஜப்பான் துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் 2 பேருக்கு கொரானோ வைரஸ்!

ஜப்பான் துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் 2 பேருக்கு கொரானோ வைரஸ்!
டைமண்ட் கப்பல்
  • Share this:
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனோ வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில், முதல் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அந்நாட்டில் 908 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், 2002 ஆம் ஆண்டு சீனாவைத் தாக்கிய சார்ஸ் வைரஸை விட, கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சீன சுகாதாரத்துறை அறிவித்தள்ளது.

இதனிடையயே ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள 3,700 பேரில் இதுவரை இந்தியர்கள் 2 பேர் உட்பட மொத்த் 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கப்பலில் உள்ள அனைவரையும் சோதனை செய்யும் உட்கட்டமைப்பு தங்களிடம் இல்லை என்று ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், அனைவரையும் சோதனை செய்த பிறகே கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் எழுந்துள்ள நிலையில், ஜப்பான் அரசு செய்வதறியாது திணறிவருகிறது.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading