• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா அறிகுறியுடன் சென்னையில் ஊர் சுற்றிய கட்டடப் பொறியாளர் மீது வழக்கு!

கொரோனா அறிகுறியுடன் சென்னையில் ஊர் சுற்றிய கட்டடப் பொறியாளர் மீது வழக்கு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் உடனே 044-29510400, 044-2951500, 9444340496, 8754448477 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா தொற்று பரவலை தடுக்க, வீட்டில் தனிமையில் இல்லாமல் சுற்றிய கட்டட பொறியாளர் மீது சுகாதார விதிகளை மீறியதாக சென்னை போலீசார் முதல் முறையாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான கட்டட பொறியாளர் ஒருவர் அடிக்கடி துபாய் சென்றுவந்துள்ளார். கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவிய நிலையில், சென்னை திரும்பிய பொறியாளரை சென்னை விமான நிலையத்தில் பரிசோதித்த அதிகாரிகள் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுத்தி அனுப்பினர்.

ஆனால் வீடு திரும்பிய அந்த பொறியாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரையை மதிக்காமல், சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சுகன்யா தேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் கட்டட பொறியாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பிறருக்கு தொற்று நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகன் கீழ் பொறியாளர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. சுகாதரத்துறை அதிகாரிகளின் கடும் எச்சரிக்கைக்கு பிறகு சம்பந்தப்பட்ட கட்டட பொறியாளர் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சுகாதார விதிகளை மீறும் நபர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ள நிலையில், கவனக்குறைவாக கட்டடப் பொறியாளர் சுற்றித்திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வீதியில் நடமாடுவது மிகப்பெரிய குற்றம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் உடனே 044-29510400, 044-2951500, 9444340496, 8754448477 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Also see... 





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: