கொரோனா தடுப்புப் பணிகள்: 191 உயர் சிறப்பு மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்..
கொரோனா தடுப்புப் பணிகள்: 191 உயர் சிறப்பு மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்..
கோப்பு படம்
ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 40 பேர், கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு 50 பேர் என சென்னையில் மட்டும் 90 பேர் பணியமைர்த்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணிக்காக 191 உயர் சிறப்பு மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 90 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் பண்டிகை காலங்களில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை குறைக்க்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கொரோனா தடுப்பு பணிக்காக 191 உயர் சிறப்பு மருத்துவர்களை 3 மாதம் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு நியமித்துள்ளது. இதன்படி ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 40 பேர், கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு 50 பேர் என சென்னையில் மட்டும் 90 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு 30 பேர், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கு 20 பேர், திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கு 21 பேர், கோவை இஎஸ்ஐ, கரூர் மருத்துவ கல்லூரி, ஈரோடு மருத்துவ கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு தலா 10 என்று மொத்தம் 191 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று 547 முதுகலை மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள 37 மருத்துவமனைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.