Oxygen : குவைத்தில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இந்தியா வந்தது

ஆக்சிஜன்

குவைத்தில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மங்களூருவுக்கு இந்திய கடலோர காவல் படை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது.

  • Share this:
    கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதனால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அங்கே, கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஆக்சிஜன் பற்றாக்குறியால் கர்நாடகாவின் சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பலியானதாக கூறப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

    இது குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிடம் தெரிவித்து கர்நாடகாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய அரசு சார்பில் குவைத் நாட்டில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் பெறப்பட்டது.

    இந்த ஆக்சிஜன் 1,200 சிலிண்டர்களிலும், 60 கன்டெய்னர்களிலும் நிரப்பப்பட்டு குவைத் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. குவைத்தில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சர்துள் கப்பல் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கன்டெய்னர்கள் கொண்டுவரப்பட்டன.

    அந்தக் கப்பல் நேற்று கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. பின்னர் துறைமுகத்தில் இருந்து பிரத்யேக லாரிகள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களும், கன்டெய்னர்களும் கொண்டு செல்லப்பட்டு தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரளாவில் ஒரே நாளில் 29,803 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 177 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்திலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால், 190 மெட்ரிக் டன் ஆக்சிஜனையும் கர்நாடக அரசும், கேரள அரசும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. இதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, கர்நாடக அரசும், கேரள அரசும் ஆக்சிஜனை பகிர்ந்து தங்கள் மாநில அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க உள்ளன.

    Must Read : செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகத்துக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

     

    இதனால், கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பிரச்னை ஓரவுளவுக்கு கட்டுக்குள் வரும் என்றும், இன்னும் பல நாடுகளில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published: