"வந்தே பாரத்" விமானத்தில் சீனா சென்ற 19 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று

"வந்தே பாரத்" விமானத்தில் சீனா சென்ற 19 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று

கோப்புப் படம்

இந்தியாவில் இருந்து "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சீனா சென்ற 19 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது. கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் விமான போக்குவரத்திற்கு சீனா சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும், இந்தியாவில் உள்ளவர்கள் சீனாவுக்கு செல்லவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை  ஏர் இந்தியா விமானம் உஹான் நகரத்திற்கு பயணம் மேற்கொண்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள் பயணம் மேற்கொண்ட நிலையில் அதில் 19 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 39 பேர் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளனர்.

படிக்க...இங்கிலாந்தில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - மீண்டும் ஒரு மாத ஊரடங்கு அறிவிப்புஇதுகுறித்து விளக்கமளித்த ஏர்-இந்தியா, டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கும் போது, அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published: