உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பல்கலைக் கழகத்தில் ஜவஹர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் உள்ளது. இதில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேராசிரியர்கள் 18 பேர் கடந்த 20 நாட்களில் உயிரிழந்தனர்.
கடந்த மார்ச் இறுதியில் 2 நாட்களில் அலிகர் பல்கலைக்கழகத் தின் 10 பேராசிரியர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். அலிகரில்இருந்து வெளியூர் சென்றவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பலர் அலிகர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள். அலிகரை சுற்றியுள்ளபகுதி மக்களில் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து,அலிகரில் பல்கலைக்கழகம்அமைந்துள்ள சிவில் லைன் பகுதியில் உருமாறிய புது வகை வைரஸ் பரவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை தீர்க்க அலிகரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மாதிரிகளை மத்திய அரசின் ஐசிஎம்ஆர் மற்றும் சிஎஸ்ஐஆர் ஆகிய ஆய்வகங்களுக்கு அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக வெகுஜன தொடர்பியல் ஊடகத்துறை பேராசிரியர் ஷாஃபி கிட்வாய், ஆங்கில ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது “சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 20 நாட்களில் 18 பேராசிரியர்களை இழந்துள்ளோம். இது பல்கலைக் கழகத்துக்கு பெரிய இழப்பு.
பல்கலைக் கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மரணங்களை அடுத்து மிகவும் வீரியமிக்க வைரஸ் வகை பரவிவருகிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் கிட்வாய் தெரிவித்துள்ளார்.
பல்கலை துணை வேந்தர் தாரிக் மன்சூர் தன் சகோதரரை கோவிட் காய்ச்சலுக்கு இழந்தார். இவர் தான் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து சாம்பிள்களை எடுத்து சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் ஐசிஎம்ஆர்-க்குக் கோரிக்கை எழுப்பி எழுதியுள்ளார்.
ஏப்ரல் 20ம் தேதி பல்கலைக் கழக வளாகத்தில் முதல் மரணம் ஏற்பட்டது. பணியாற்றும் பேராசிரியர்கள் மட்டுமல்ல, ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் மரணமடைந்துள்ளனர். இதுவரை 10 ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கோவிட்-19-க்குப் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் கான்பூரில் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அலிகார் பகுதியில் மிகவும் வீரியமிக்க வைரஸ் ஸ்ட்ரெய்ன் பரவுகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.