முகப்பு /செய்தி /கொரோனா / 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி... ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி... ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு

சில பெண்கள் தாமதமான மாதவிடாய், சில பெண்கள் சீக்கிரமான மாதவிடாய், சிலர் அதிக இரத்தப்போக்கு, சிலர் குறைவான இரத்தப்போக்கு என புகார் அளித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மையான பெண்கள் எந்தவித பாதிப்பையோ ,
பக்கவிளைவுகளையோ சந்திக்கவில்லை. இது ஒரு சிலருக்கு மட்டுமே நிகழக்கூடிய தற்காலிக பக்கவிளைவுகளாகும்.

சில பெண்கள் தாமதமான மாதவிடாய், சில பெண்கள் சீக்கிரமான மாதவிடாய், சிலர் அதிக இரத்தப்போக்கு, சிலர் குறைவான இரத்தப்போக்கு என புகார் அளித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மையான பெண்கள் எந்தவித பாதிப்பையோ , பக்கவிளைவுகளையோ சந்திக்கவில்லை. இது ஒரு சிலருக்கு மட்டுமே நிகழக்கூடிய தற்காலிக பக்கவிளைவுகளாகும்.

18 வயதில் இருந்து 44 வயதுக்கு உட்பட்ட சுமார் 1 கோடியே 33 லட்சம் பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதல் நாளிலேயே முன்பதிவு செய்துள்ளனர்.

  • Last Updated :

நாடு முழுவதும் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி போடப்படும் நிலையில், மே ஒன்றாம் தேதி முதல் 18இல் இருந்து 44 வயது வரை நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதற்காக, கோவின், ஆரோக்ய சேது மற்றும் உமாங் செயலி மூலம் நேற்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. ஆனால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால், மூன்று தளங்களும் முடங்கின.

இதையடுத்து கோளாறு சரி செய்யப்பட்டது. முதல்நாளிலேயே, சுமார் 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு செய்ததாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாநில அரசும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய உள்ளதால், தற்போது வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ளன.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்பட 6 மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மே 15ம் தேதிக்கு பிறகே தடுப்பூசிகளை வழங்க முடியும் என சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி மே ஒன்றில் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus, Tirupati