நியூஸ் 18 செய்தியின் எதிரொலி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 179 பேர் - விமான நிலையத்திலேயே பரிசோதிக்கப்பட்ட பயணிகள்...
நியூஸ் 18 செய்தியின் எதிரொலி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 179 பேர் - விமான நிலையத்திலேயே பரிசோதிக்கப்பட்ட பயணிகள்...
விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்ட பயணிகள்
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் 179 பயணிகள் திருச்சி அழைத்துவரப்பட்டனர். இதில் முதியோர், கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அளித்து அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா பொது முடக்கத்தால் கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் தவிப்பதாக கடந்த வாரம் நியூஸ் 18 தொலைகாட்சியில் செய்தி ஒளிபரப்பாகியது.
இதையடுத்து வெளியுறவுத்துறை அனுமதியோடு தமிழ்நாடு அரசின் முயற்சியில் நேற்று முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் விமானம் நேற்று மதுரைக்கு வந்தது. இதனை தொடர்ந்து கோவை, சென்னைக்கும் இயக்கப்படுகின்றன.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அங்கேயே கொரோனா தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அவர்களின் கைகளில் முத்திரை குத்தப்பட்டு, முதல் கட்ட பரிசோதனையில் அறிகுறி இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அறிகுறி இருந்தால் திருச்சி அரசு மருத்துவமனை அல்லது சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதன்படி, சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 179 பேருக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், சென்னையைச் சேர்ந்த 7 பேர் என மொத்தம் 28 பேர் மட்டும் திருச்சியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தினர் 30 பேர், திருவாரூர் மாவட்டத்தினர் 44 பேர் உட்பட மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனப்து குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.