சென்னையில் 3 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - 2 வாரங்களில் 6,151 பேருக்கு தொற்று

சென்னையில் 60.31 சதவீதம் ஆண்களும், 39.67 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் 3 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - 2 வாரங்களில் 6,151 பேருக்கு தொற்று
கோப்புப்படம்
  • Share this:
புதிய உச்சமாக ராயபுரத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,277 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மே 21ம் தேதி உறுதி செய்யப்பட்ட 776 தொற்றுகளில், சென்னையில் 567  பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 8,795 பேரில், 3062 பேர் குணமடைந்துள்ளனர்.  68 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர்  62.9 சதவிகிதம். அதேபோல், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில் தான்  67.8 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 161 பேரும்,  அண்ணாநகரில் 57 பேரும், தேனாம்பேட்டையில் 57 பேரும், திரு.வி.க.நகரில் 56 பேரும், தண்டையார்பேட்டையில் 50 பேரும்,  கோடம்பாக்கம் 39 பேரும், வளசரவாக்கத்தில் 35 பேரும், அடையாறு 26 பேரும், அம்பத்தூரில் 24 பேரும், சோழிங்கநல்லூரில் 17 பேரும், மாதவரத்தில் 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பெருங்குடியில் 9 பேரும், மணலியில் 7 பேரும், திருவொற்றியூரில் 7 பேரும், ஆலந்தூரில் 6  பேரும், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:ராயபுரம் 1,699

கோடம்பாக்கம் 1,231

திரு.வி.க.நகர் 1,032

தேனாம்பேட்டை 926

தண்டையார்பேட்டை 823

அண்ணா நகர் 719

வளசரவாக்கம் 605

அடையாறு 472

அம்பத்தூர் 376

திருவொற்றியூர் 228

மாதவரம் 186

சோழிங்கநல்லூர் 130

மணலி 115

பெருங்குடி 112

ஆலந்தூர் 96

ராயபுரம், கோடம்பாக்கத்தை தொடர்ந்து திரு.வி.க.நகரிலும் தொற்று எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது. அதேபோல், அடையாறு, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் மண்டலத்திலும் கணிசமாக தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் கடந்த இரு வாரங்களில் 6,151 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ம் தேதி 2,644 ஆக இருந்த தொற்று பாதிப்பு; ஏப்ரல் 21ம் தேதி 8,795 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தொற்று


சென்னையில் 2.31 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மே 8ம் தேதி ராயபுரத்தில் 422 ஆக இருந்த தொற்று, 1,699 ஆக அதிகரித்திருக்கிறது. இது நான்கு மடங்கு அதிகமாகும்.

சென்னையில் 60.31 சதவீதம் ஆண்களும், 39.67 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.


Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading