தமிழகத்தில் 1,601 கர்ப்பிணிகளுக்கு பேறுகாலத்தின்போது கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் 1,601 கர்ப்பிணிகளுக்கு பேறுகாலத்தின்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1,601 கர்ப்பிணிகளுக்கு பேறுகாலத்தின்போது கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
கோப்புப் படம்
  • Share this:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள், தலைமைச் செவிலியர்கள் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் மருத்துவம் குறித்து நெகிழ்ச்சியோடு மருத்துவர்கள் எடுத்துரைத்தார்கள். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 1,461 படுக்கை வசதிகள் தயார் செய்துள்ளோம். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. உயிர் காக்கக் கூடிய மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்முக நடவடிக்கைகள் தமிழக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா குறித்து மக்கள் பயம் பதட்டம் கொள்ள வேண்டாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். தமிழகம் முழுவதும் 1,601 கர்ப்பிணிப் பெண்கள் பேறுகாலத்தின்போது கொரோனா பாதிக்கப்பட்டது.

மதுரையில் 40 பேருக்கு கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு இருந்தது. அவர்களை குணப்படுத்தி அனுப்பி வருகிறோம். தமிழகத்தில் சென்னையில் 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு 24 பேர் குணமாகி உள்ளனர். மதுரையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு நான்கு பேரும் குணமாகி உள்ளனர்’ என்று தெரிவித்தார்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading