ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்த 16 பேர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட கொரோனா கேர் மையங்களில் 2232 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மீதமுள்ள 1483 படுக்கைகள் காலியாக உள்ளன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்த 16 பேர்
ராஜீவ் காந்தி மருத்துவமனை
  • Share this:
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தீரனி ராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் இதுவரை கொரோனா தொற்றுடன் இணை நோய்களோடு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 2430 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.‌

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில், சக்கரை நோயுடன் இருந்தவர்கள் 940 பேரும், உயர் இரத்த அழுத்தம் இருந்தவர்கள் 851 பேரும், வீரியம் குறைந்த நாள்பட்ட நோயுடன் இருந்தவர்கள் 127 பேரும், இருதய நோயாளிகள் 144 பேரும், ஆஸ்துமா நோயுடன் 329 பேரும், வேகமாகப் பரவக்கூடிய இதர நோய்களுடன் இருந்தவர்கள் 26 பேரும், காசநோயால் பாதிக்கப்பட்டோர் 10 பேரும், எய்ட்ஸ் நோயாளிகள் 3 பேரும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 64 புற்று நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சைக்காக 1000 படுக்கைகள் தயார் நிலையில் தற்போது உள்ளன. அதில் 750 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. 499 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 251 படுக்கைகள் காலியாக உள்ளன.

இதுவரை மொத்தம் 43 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ( ICU ) சிகிச்சை பெற்று தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 22 நோயாளிகள் ஆரம்பக்கட்ட சுவாச சிகிச்சை (CPAP) முறையிலும், 21 நோயாளிகள் வெண்டிலேட்டர் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also see:

இதுவரை பிளாஸ்மா சிகிச்சை பெற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

ரெம்டிசிவர் மருந்தானது இரண்டாம் கட்ட பரிசோதனை முறையில் கொரோனோ நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொடுப்பதினால் நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு பொதுமக்கள் அஞ்சாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்து நம்பிக்கையோடு இருக்க வேண்டும். மேலும், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட கொரோனா கேர் மையங்களில் 2232 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மீதமுள்ள 1483 படுக்கைகள் காலியாக உள்ளன.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading