• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா: புதுச்சேரியில் இன்று கர்ப்பிணி உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று..

கொரோனா: புதுச்சேரியில் இன்று கர்ப்பிணி உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று..

இன்று  ஆய்வு செய்யும் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

இன்று  ஆய்வு செய்யும் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கொரோனா நோய் தொற்றால் புதுச்சேரியில் இன்று 8 மாத கர்ப்பிணி உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
புதுச்சேரி எல்லைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று  ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுச்சேரியில் நோய் பாதித்தவர்கள், இறந்தவர்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

எல்லைகளின் தடுப்பு காரணமாக வெளிமாவட்டத்தினர் வருகை குறைந்து விட்டது. இருப்பினும் சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பலரும் வந்து 11 நாட்கள் ஓட்டல்களில்  தங்கி செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரிக்குள் வருபவர்களை மருத்துவ குழு சோதனைக்கு பின்னரே அவசியமானவர்களை அனுமதிக்க வேண்டும் என எல்லையில் பாதுகாப்பில் உள்ள  அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க... 

Photos | தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை: முழு ஊரடங்கால் வெறிச்சோடிய காஞ்சிபுரம்

புதுச்சேரியில் இன்று 16 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சென்னையில் இருந்து திரும்பிய 37 வயது உடைய காரைக்காலை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி.மொத்த பாதிப்பு 287. தற்போது சிகிச்சையில் 162 பேர் உள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இதுவரை 7 பேர் இறந்துள்ளனர் என சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: