தஞ்சாவூரில் மேலும் 15 மாணவர்கள், 14 ஆசிரியர்களுக்கு கொரோனா!

கொரோனா வைரஸ்

இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில், 15 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்களுக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தஞ்சாவூரில் மேலும் 15 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று வரை 11 பள்ளிகளை சேர்ந்த 98 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், சிகிச்சைக்குப் பிறகு, 58 மாணவர்கள், 8 ஆசிரியர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

  இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில், 15 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்களுக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத, கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மஹர்நோன்பு சாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மீது, வழக்குப்பதிவு செய்து ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
  Published by:Ram Sankar
  First published: