• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30 வரை நீட்டித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    சென்னையில் இதுவரை இல்லாத உச்சமாக 964 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனிடையே சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30 வரை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தை தடுக்கும் விதமாக, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி சட்டப்பிரிவு (2) தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை 1897-ல் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு எண் CSCR/130-216/2020 பொது துறை 17-5-2020 நாளிட்ட அரசு கடிதத்தின் படி சட்டப் பிரிவு 144 குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் பிரிவு 20( 2 ) குற்றவியல் நடைமுறை சட்டம் ( மத்திய சட்ட பிரிவு (2) 1974 ) - ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் ஆணை நீட்டிக்கப்பட்டது.



    மேற்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணையை மீறுபவர்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். பொதுநலன் மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு தற்போது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுளளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



     

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: