தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா தனி மருத்துவமனை - முதல்வர் ஆலோசனை

பிரதமரின் உத்தரவை முழுமையாக தமிழக அரசு பின்பற்றும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா தனி மருத்துவமனை - முதல்வர் ஆலோசனை
முதலமைச்சர்
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு என பிரதமர் அறிவித்துள்ளார்.


கொரனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமையாக வைக்க அனைத்து மருத்துவமனைகளிலும் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனி மருத்துவமனைகள் நான்கு இடங்களில் அமைய உள்ளது.

தாம்பரம் சானிட்டோரியம், மதுரை தோப்பூர் உட்பட நான்கு இடங்களில் தனி மருத்துவமனைகள் அமைகின்றன என்று முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  மேலும், பிரதமரின் உத்தரவை முழுமையாக தமிழக அரசு பின்பற்றும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading