Home /News /coronavirus-latest-news /

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தங்குமிடம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஏற்பாடு

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தங்குமிடம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஏற்பாடு

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்.

30க்கும் மேற்பட்டோரைத் தங்கவைத்து பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதி இரவில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடின்றி சாலையோரம் வசிக்கும் மக்களை சமூகநலக்கூடத்தில் வைத்து பாதுகாக்க புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில்  மாவட்ட ஆட்சியர் அருண் கோரிமேடு பகுதியில் உள்ள வீடு மற்றும் சமுதாய நலக்கூடத்தில் 30க்கும் மேற்பட்டோரைத் தங்கவைத்து பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.

இதனிடையே வாரணாசிக்கு புனித யாத்திரை சென்ற 22 பேர், ஊரடங்கு உத்தரவால் மீண்டும் புதுச்சேரிக்கு திரும்ப முடியாமல் வாரணாசியில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்து ஆட்சியர் அருணிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். முன்னதாக அங்குள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி  சட்டப்பேரவை வளாகத்தில்  வழங்கினார்.

Also see:
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Narayana samy, Puducherry

அடுத்த செய்தி