திருப்பதி தேவஸ்தானத்தில் 14-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கொரோனா

திருப்பதி கோவிலில் வேலை செய்யும் 14 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சதலு தெரிவித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் 14-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கொரோனா
திருப்பதி (கோப்புப் படம்)
  • Share this:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்யும் 90க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் 14 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

அதன் பின் நிருபர்களுடன் பேசிய ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதலு, ”கோவிலில் வேலை செய்யும் அர்ச்சகர்களில் 14-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவது, சடாரி சாத்துவது ஆகிய நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவிலுக்குள் மிக தொலைவில் இருந்தே பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுகின்றனர்.

மேலும் படிக்க...

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்இது போன்ற காரணங்களால் பக்தர்களுடன் அர்ச்சகர்களுக்கு நேரடியான தொடர்பு இல்லாத நிலை உள்ளது. ஆனாலும் கொரோனா பரவுவது தொடர்கிறது. இந்த பரவல் எப்படி நடைபெறுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் தேவஸ்தானத்தில் வேறு இடங்களில் வேலை செய்ய வாய்ப்பு கேட்டால் அனுமதி அளிக்க தயாராக இருக்கிறோம்” என்று  கூறினார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading