தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி- முழு விவரம்

சென்னையில் மலர் மருத்துவமனை உள்ளிட்ட 11 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி- முழு விவரம்
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 135 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற சில நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 25 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் மலர் மருத்துவமனை உள்ளிட்ட 11 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்த்து 15 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சேலத்தில் 8, கோவை, மதுரையில் தலா 7 மருத்துமனைகளுக்கும், கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 6 தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, நாகை, நாமக்கல் மாவட்டங்களில் தலா 5 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 4 மருத்துவமனைகளுக்கும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்த்து 4 மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல, ஈரோடு, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 4, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு சேர்த்து 3 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தர்மபுரி, கரூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தலா 3 மருத்துவமனைகளிலும், திருப்பூர், பெரம்பலூர், கடலூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடியில் தலா இரண்டு மருத்துவமனைகளிலும், திருவண்ணாமலையில் ஒரு மருத்துவமனையிலும் கொரோனா தொற்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading