கடலூரில் கொரோனாவால் பாதித்த 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றார்.

கடலூரில் கொரோனாவால் பாதித்த 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்
கடலூரில் கொரோனாவால் பாதித்த 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்
  • Share this:
கடலூரில் கொரோனாவால் பாதித்த 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை பேண்ட் வாத்தியம் முழங்க, மலர் தூவி சக காவலர்கள் வரவேற்றனர். 

கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 134 பெண் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு கடந்த 11-ம் தேதி சோதனை செய்தபோது, அதில் 10 பெண் பயிற்சி காவலர்கள் மற்றும் பயிற்சி அளித்த 4 காவலர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மற்ற 124 பயிற்சி பெண் காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று 9 பெண் பயிற்சி காவலர்கள் மற்றும் பயிற்சி கொடுத்த காவலர்கள் 4 பேர் என 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


இவர்கள் அனைவரும் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த போது சக பயிற்சி காவலர்கள் வரிசையில் நின்று பேண்ட் வாத்தியங்கள் முழங்க அவர்களை வரவேற்று அவர்கள் மீது மலர் தூவினர்.

மேலும் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றார். மேலும் அனைவரும் கைதட்டி அவர்களை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading