12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை..!

பொதுத் தேர்வு விடைத்தாள்கள் இந்த முறை சென்னையில் திருத்தப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை..!
(கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா பாதிப்பால் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு திருத்துவதற்காக வெவ்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

அந்த வகையில் சென்னைக்கு வேறு மாவட்டத்தில் இருந்து விடைத்தாள்கள் சென்னைக்கு வந்தன. இந்த சூழ்நிலையில் சென்னைக்கு அனுப்பப்பட்ட பொதுத் தேர்வு விடைத்தாள்கள் இந்த முறை சென்னையில் திருத்தப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.


கொரோனோ வைரஸ் பரவல்  சென்னையில்  அதிகமாக இருப்பதன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் சென்னைக்கு வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also see...





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading