இந்தியாவில் 12,830 பேர் கொரோனாவால் பாதிப்பு!

கொரோனா

கொரோனா

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 414-ஆக அதிகரிப்பு.

 • Share this:
  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 830-ஆக அதிகரித்துள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 2 015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் ஒருநாளில் இந்தியாவில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 61414-ஆக உள்ளது. 1489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு உயிரிழப்பு 187-ஆக உள்ளது. தலைநகர் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1578-ஆக உயர்ந்துள்ளது.

  ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. ஆனாலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 மட்டுமே. மத்தியபிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 700-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தெலங்கானாவில் 600-க்கும் மேற்பட்டோரும், ஆந்திராவில் 500-க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300-ஐ எட்டியுள்ளது.

  Also see...  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: