கைகொடுத்த காய்ச்சல் முகாம்: சென்னையில் கண்டறியப்பட்ட 12,000 பேர் - தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படுமா?

சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் காய்ச்சல் முகாம்கள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கைகொடுத்த காய்ச்சல் முகாம்: சென்னையில் கண்டறியப்பட்ட 12,000 பேர் - தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படுமா?
கோப்பு படம்
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டிருந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது சென்னை மாநகராட்சி. தினமும் காலை 8.30 முதல் 11 மணி வரை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அதன்பிறகு 11.30 மணி முதல் 1.30 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கே சென்றும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

இதில் நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 8-ஆம் தேதி முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை 18, 127 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 11 ,53,399 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.  இவர்களில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள 60,686  பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில் அதிக அறிகுறி உள்ள 57, 185  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


இதில் 12,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 22.5 சதவிகிதம் பேருக்கு உறுதியாகி உள்ளது.அதிகபட்சமாக, அண்ணா நகர் மண்டலத்தில் 2,497 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,386 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 1,270 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,155 பேரும் கண்டறியப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாராவி பகுதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது சென்னையிலும் நல்ல பலனை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த காய்ச்சல் முகாம் மூலம் தொற்று உள்ளவர்களை முன் கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க...’என்ன சாக கூப்பிடுது அந்த பேய்...’ கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவி

எனவே, இந்த திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  தீவிரமாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, கிராமங்களில் தினசரி காய்ச்சல் முகாம்களை நடத்தி அறிகுறி உள்ளவர்களை முன் கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பரவலை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading