Home /News /coronavirus-latest-news /

புதுச்சேரியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர்!

புதுச்சேரியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர் இன்று காலை ரயிலில் அனுப்பி வைப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர் இன்று காலை ரயிலில் அனுப்பி வைப்பு

அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசிய, சவூதி அரேபியா நாட்டில் உள்ளவர்கள் இங்கே அழைத்து வர உள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில் வேலை செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு மூலம் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக  பீகார் மற்றும் உத்தர பிரதேசங்களை சேர்ந்த 1200 தொழிலாளர்கள் இன்று அதிகாலை சிறப்பு  ரயில் மூலம் சொந்த ஊருக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறப்பு ரயிலை முதல்வர்  நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் அருண்  உள்ளிட்டோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். முன்னதாக  காரைக்கால் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 355 பேர் இன்று சிறப்பு ரயில் மூலம் காரைக்காலிலிருந்து உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர் இன்று காலை ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


அப்போது வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த ரயில் இரவு 12 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தது. அவர்களுடன் புதுச்சேரியில் காத்திருந்த தொழிலாளர்களும் சேர்த்து 1200 பேர் பீகார், உபி சென்றனர்.

புதுச்சேரியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1200 பேர் இன்று காலை ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதே போல் அடுத்ததாக அசாம், காஷ்மீர் மாநிலங்களுக்கு தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சுமார் ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் கர்நாடக, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசிய, சவூதி அரேபியா நாட்டில் உள்ளவர்கள் இங்கே அழைத்து வர உள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




href="https://www.youtube.com/News18TamilNadu">YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Lockdown, Puducherry

அடுத்த செய்தி