Covid-19: தமிழகத்தில் ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக ஒரே வாரத்திற்குள் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக ஒரே வாரத்திற்குள் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும் என மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக சித்த மருத்துவ மையத்தை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், மிதமான அளவு தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்த சித்தா மையங்கள் தொடங்கப்படுகின்றன என்றும் இங்கு அனுமதிக்கபப்ட்டுள்ள நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், அமுக்கர சூரண மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை போன்றவை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில்  தற்போது 1,140 சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் பணியாற்றிவருகிறார்கள் என்றும் சேவை மனப்பான்மையோடு சித்த மருத்துவர்கள் பணி செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்,

    தமிழகத்தில் தற்போது 12 சித்தா மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்த மா.சுப்பிரமணியன், மேலும் ஒரு வாரத்திற்குள் 12 இடங்களில் சித்தா மையங்கள் தொடங்கப்படும் என கூறினார்.  கடந்த ஆண்டு சித்தா மருத்துவ முறையால் 2000த்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் நலம் பெற்றிருக்கிறார்கள் எனவும் தனது பேச்சின்போது அவர் சுட்டிக்காட்டினார்.

    மேலும், “தொற்று ஏற்பட்டவுடன் அனைவரும் மருத்துவமனை செல்வதை தவிர்க்க வேண்டும். மிதமான தொற்று ஏற்பட்டவர்களை குணமாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சித்தா மையங்களில் சிகிச்சை பெருபவர்களுக்கு மனநல ஆலோசனை, யோக பயிற்சி வழங்கப்படும். 70 படுக்கையுடன் சென்னையில் ஜெயின் கல்லூரியில் அடுத்த வாரம் சித்தா மையம் தொடங்கப்படவுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: