இந்தியாவில் 12.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சகம்

தடுப்பூசி

நாடு முழுவதும் 12.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் 12.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள், நடுத்தர வயதினர் என பல்வேறு தரப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  கொரோனா 2ஆவது அலை நாடு முழுவதும் வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தையும் மத்திய-மாநில அரசுகள் அதிகப்படுத்தியுள்ளனர். அதன்படி, நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

  அதன்படி, 24 மணி நேரத்தில் 12,30,007 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதில், 9,40,725 பேர் முதல் டோசும், 2,89,282 பேர் 2ஆவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.

  இந்தியாவில் போடப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 12.38 கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 2ஆம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 3ஆவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

  Must Read :  கொரோனா வாரியர்ஸ் : முன்கள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிவிப்பு

   

  இந்நிலையில், 18 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: