உலகையே அச்சுறுத்தும் கொரோனாவை வென்று வந்த 113 வயது மூதாட்டி..!

Corona Virus | கொரோனா மட்டுமல்ல 1918 மற்றும் 1919-ம் ஆண்டுகளில் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயிலிருந்தும் தப்பியவர்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவை வென்று வந்த 113 வயது மூதாட்டி..!
  • Share this:
உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 113 வயது மூதாட்டி மீண்டு வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் வயதானவர்கள் தான். ஆனால் 113 வயதில் கொரோனோ தொற்றிலிருந்து மீண்டு வந்து வயதானவர்களிடம் தன்னம்பிக்கை எற்படுத்தி உள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர். உலகில் அதிக வயதில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மரியா பிரன்யாஸ். 113 வயதான இவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுமுதல் முதியோர் காப்பகத்தில் உள்ள ஒரு அறையில் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.


கொரோனா மட்டுமல்ல 1918 மற்றும் 1919-ம் ஆண்டுகளில் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயிலிருந்து தப்பியவர். மேலும் 1936 மற்றும் 1939-ம் ஆண்டுகளில் உலகப்போர் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டு போரையும் கடந்து வந்தவர் மரியா ஸ்பானிஸ்.

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மரியா கூறுகையில், “தற்போது உடல்நலமாக உள்ளது. ஆனால் எப்போதும் போல சிறிய வலிகளால் அவதிப்படுகிறேன். கொரோனா தொற்றிலிருந்து என்னை காப்பாற்றிய காப்பக ஊழியர்களுக்கு நன்றி“ என்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 2 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

First published: May 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading