கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 11 பேர் வீடுகளுக்கு திரும்பினர்!

மாதிரிப்படம்

 • Share this:
  சிவகங்கை மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 11 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில், திருப்பத்தூரை சேர்ந்த மூவர், தேவகோட்டையை சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் குணமடைந்தனர்.

  இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். பாதிப்பில் இருந்து மீண்ட 6 பேரையும் அவரவர் வீடுகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

  இதேபோல் நெல்லையில் பாதிக்கப்பட்ட 56 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 5 பேருடன் சேர்த்து இதுவரை நெல்லை மாவட்டத்தில் 19 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

  இதனால் நெல்லை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37 ஆக குறைந்துள்ளது.

  Also see...  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: