தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21,000 கடந்துள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை 12,49,292 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,25,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 9276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று காலை 11
கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் உயிரிழப்புக்கு காரணம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என்றும் அபாய கட்டத்தில் அவர்கள் சிகிச்சைக்கு வந்ததால் உயிரிழந்ததாக விளக்கமளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.