தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எத்தனை?

அதிகபட்சமாக சேலத்தில் 184 இடங்களும், சென்னையில் 158 இடங்களும், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 84 இடங்களும், மதுரையில் 75 இடங்களும் உள்ளன.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எத்தனை?
(Image: Chennai Corporation)
  • Share this:
தமிழகம் முழுவதுமுள்ள 1089 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேலம், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், மதுரை மாவட்டங்களில் அதிகமான பகுதிகள் உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நோய் தொற்று அதிகமுள்ள தெருக்கள் 14 நாட்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்படும் நடைமுறையை சுகாதாரத்துறை பின்பற்றி வருகிறது. 

ஜூலை 6 நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் 1089 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு.

இதில் அதிகபட்சமாக சேலத்தில் 184 இடங்களும், சென்னையில் 158 இடங்களும், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 84 இடங்களும், மதுரையில் 75 இடங்களும் உள்ளன.Also read... சென்னையில் காய்ச்சல் முகாம் மூலம் தற்போது 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, நாகை, தூத்துக்குடியில் 5 இடங்களும், கன்னியாகுமரியில் 3 இடங்களும் உள்ளன.

நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூர் மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக நிலவரம் :

செங்கல்பட்டு - 29

சென்னை - 158

கோவை - 13

கடலூர் - 59

திண்டுக்கல் - 14

ஈரோடு - 7

கள்ளக்குறிச்சி - 16

காஞ்சிபுரம் - 33

கன்னியாகுமரி - 3

கிருஷ்ணகிரி - 5

மதுரை - 75

நாகப்பட்டினம் - 5

புதுக்கோட்டை - 9

இராமநாதபுரம் - 16

ராணிப்பேட்டை - 15

சேலம் - 184

சிவகங்கை - 10

தென்காசி - 10

தஞ்சாவூர் - 23

தேனி - 17

திருவாரூர் - 37

தூத்துக்குடி - 5

திருநெல்வேலி - 7

திருப்பத்தூர் - 84

திருப்பூர் - 55

திருவள்ளூர் - 50

திருவண்ணாமலை - 84

திருச்சி - 12

விழுப்புரம் - 20

விருதுநகர் - 34
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading