108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது

108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
108 ஆம்புலன்ஸ்
  • News18
  • Last Updated: July 8, 2020, 6:37 AM IST
  • Share this:
கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் சேவை மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தேவைகள் அதிகரிக்கும் நிலையில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையையும் அரசு உயர்த்த உள்ளது. இதனால், ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஓட்டுநராக விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும்.  24 முதல் 34 வயதானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

B.Sc நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்த 19 முதல் 30 வயதினர் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும். தொலைபேசி வாயிலாக தேர்வுகள் நடைபெறும்.
படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்படிக்க: தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்களைவிட அதிகரித்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 9384010215, 7397724763, 7397724807, 7397724809, 7397724812, 7397724810, 8754435247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 7397724812, 7397724810, 7397724807, 7397724809, 8754435247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வார இறுதி வரை இந்த பணிகளுக்கு தொலைபேசி மூலம் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் தற்போது 80 ஆம்புலன்ஸ்களும் பிற மாவட்டங்களில் சுமார் 80 ஆம்புலன்ஸ்களும் கொரோனா பணிக்காக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading