கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை திருப்பதியில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களில் பொதுமக்கள் செய்துகொண்ட சோதனைகளில் 9,164 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 845 பேர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் ஆவர். பரிசோதனை சமயத்தில் அவர்கள் கொடுத்த தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றின் அடிப்படையில் 845 பேர் வெளியூர்களில் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.
அதன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, திருப்பதியில் இருந்து தகவல்கள் அனுப்பப்பட்டு, அவர்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் செய்தியாக திருப்பதியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களில் 1,049 பேர் மாயமாகிவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாயமானர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பரிசோதனை சமயத்தில் அவர்கள் அளித்த முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து மாயமான 1,049 பேரையும் கண்டுபிடிக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் கொடுத்த தொலைபேசி எண், முகவரி ஆகியவை போலியானவை என்று தெரிய வந்தது. எனவே தற்போதைய நிலையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதிக்கு நாள்தோறும் சாமி தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், தொற்று ஏற்பட்டு மாயமாகிவிட்ட 1,049 பேரும் திருப்பதியில் உலவி கொண்டிருந்தால், அவர்கள் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கும் கொரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும், கொரோனா இரண்டாவது அலைவீச்சு தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருப்பதியில் மாயமான 1,049 கொரோனா நோயாளிகள் இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு நோய் தொற்றை பரப்புவார்களோ என்ற அச்சத்தில் இருக்கும் அதிகாரிகள் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Must Read : மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையளித்த விவசாயி!
இந்த தகவலை அறிந்த உள்ளூர் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona positive, CoronaVirus, Covid-19, Tirupati