100 பேருக்கு கொரோனாவை பரப்பிய திருமண நிகழ்ச்சி; மணமகளின் தந்தை உட்பட 4 பேர் மரணம்!

மாதிரி படம்

மணமகன் மற்றும் மணமகள் என இருவருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் மணமகளின் தந்தை தொற்று பாதிப்பால் மரணமடைந்ததும் தெரியவந்துள்ளது.

  • Share this:
திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், அதில் கலந்து கொண்ட 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கியது. சுமார் மூன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் நோய்த்தொற்று கட்டுக்குள் வராமல் உள்ளது.

தமிழகம், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் முழு ஊரடங்கினை பிறப்பித்துள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. ஊரடங்கு விதிகளை சரியாக பின்பற்றினாலே நோய் கட்டுக்குள் வரும் என்பதே அரசாங்கத்தின் அறிவுறுத்தலாக இருக்கிறது.

திருமணம், இறுதிச் சடங்குகளை செய்வதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றாலும் இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறியாகத் தான் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் அன்றாடம் செய்திகளில் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஊரடங்கு விதிகளை மீறி நடத்தப்பட்ட திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேரின் உயிரிழப்புக்கும் அந்தத் திருமண நிகழ்ச்சி தற்போது காரணமாக மாறியிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் அங்கு திருமணத்தில் அதிகபட்சமாக 40 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி இருக்கிறது. இருப்பினும் கம்மம் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு விதிகளை மீறி கலந்துகொண்டனர்.

இத்திருமணத்தில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் அவரின் தொற்று பாதிப்பு குறித்து விசாரித்த மாநில சுகாதாரத்துறையினர் அவர் திருமணத்தில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதன் பின்னர் துரிதமாக செயல்பட்ட சுகாதாரத்துறையினரின் விசாரணையில் அத்திருமணத்தில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் மேலும் 4 பேர் அதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அத்திருமணத்தில் முகக் கவசத்தை யாரும் சரிவர அணியவில்லை எனவும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணமகன் மற்றும் மணமகள் என இருவருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் மணமகளின் தந்தை தொற்று பாதிப்பால் மரணமடைந்ததும் தெரியவந்துள்ளது.

Read More:   திருமண ஊர்வலம் வரை வந்த மணமகன்.. கொரோனா பாசிட்டிவ் அறிக்கையால் நேர்ந்த சோகம்!

இதே போல நிஜாமாபாத் மாவட்டத்தின் ஹன்மஜிபேட்டின் ஊரடங்கு விதிகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் அதில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: