சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படும் நபர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சேலம், எடப்பாடி, மேட்டூர், தலைவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கி மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கூறி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கூறும்போது, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 1,210 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 943 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 250 நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் குணமடைவோர்கள் சதவீதம் 83 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் அரசு மருத்துவமனையில் புதியதாக வந்து உள்ள அனைத்து மருந்துகளும் போதிய அளவு இருப்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.