• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Corona | கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

Corona | கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா 3வது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    கொரோனா 3வது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 353 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த நிதி கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41 கோடியே 40 லட்ச ரூபாயும், கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் உயிர் காக்கும் மருந்துகளை வாங்க, 25 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இன்றைய ராசிபலன் (ஜூன் 30, 2021)

    இந்நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காகவும், 3ம் அலை முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளதாக, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: