ஸ்ரீரங்கத்தில் 100 பேருக்கு கொரோனா - சிறப்பு சிகிச்சை மையமாகியது யாத்ரிகா நிவாஸ்

ஸ்ரீரங்கத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்ரிகா நிவாஸ் கொரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் 100 பேருக்கு கொரோனா - சிறப்பு சிகிச்சை மையமாகியது யாத்ரிகா நிவாஸ்
ஸ்ரீரங்கத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்ரிகா நிவாஸ் கொரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
  • Share this:
தமிழகத்தில் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. திருச்சியில் ஒட்டுமொத்தமாக 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 302 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 200 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிராமப்புறங்களை விட மாநகராட்சிப் பகுதியில் தொற்று அதிகமாக இருக்கிறது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் கோட்டவாரியாக அதிகபட்சமாக ஸ்ரீரங்கத்தில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோ அபிசேகபுரம் கோட்டத்தில் 91, பொன்மலை கோட்டத்தில் 82, அரியமங்கலம் 71 என மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 195 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி புறநகரில் ஒன்றியவாரியாக மணப்பாறை 27, மருங்காபுரி 24, மணிகண்டம் 23, மண்ணச்சநல்லூர் 19, லால்குடி 14 உட்பட மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்களில் 105 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். தற்போது 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். (மாலை வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக்கூடும்.)


Also see:

தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்ரிகா நிவாஸ் கொரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக தற்போது 32 பேர் யாத்திரிகா நிவாஸில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் 38 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.
யாத்திரிகா நிவாஸில் மொத்தம் 400 பேரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 300 பேரும் தங்க வைக்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading